‘தி.மு.க. மீது புழுதி வாரி இறைப்பதில் டாக்டர் ராமதாஸ் புது சுகம் காண்கிறார்’ முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
மருத்துவ கல்விக்காக தி.மு.க. செய்த சாதனைகளை மறந்து, தி.மு.க. மீது புழுதி வாரி இறைப்பதில் டாக்டர் ராமதாஸ் புது சுகம் காண்கிறார் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘நீட்’ தேர்வு குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை மத்தியில் இருந்த காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி புகுத்தியது” என்று கூறியிருக்கிறார்.
டாக்டராகப் பட்டம் பெற்றுள்ள ராமதாஸ் மருத்துவக் கல்விக்காக தி.மு.க. செய்த அளப்பரிய சாதனைகளையும், அதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் டாக்டர்களாக ஆன விவரங்களை எல்லாம் வசதியாக மறந்து அல்லது மறைத்துவிட்டு தி.மு.க. மீது புழுதி வாரி இறைப்பதிலேயே புது சுகம் காணுகிறார்.
“நீட் தேர்வு” கொண்டு வரப்பட்டதை முதன்முதலில் இந்தியாவில் எதிர்த்தவர் தலைவர் கருணாநிதி என்பதை ஏனோ டாக்டர் ராமதாஸ் வசதியாக மறந்துவிட்டார்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றதோடு மட்டுமின்றி, தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு, “நீட் தேர்வு செல்லாது” என்று தீர்ப்பளித்தது என்பதை டாக்டர் ராமதாஸ் அரசியல் காரணத்திற்காக மறந்திருந்தால் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
சசிகலா உறவினர்கள் மீதான வருமான வரித்துறையின் அந்த சோதனையை விமர்சிப்பதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தி.மு.க.வையும் சேர்த்து விமர்சித்து, வன்னியர் சமுதாயத்தில் அங்கும் இங்குமாகத் தனக்கு இருக்கும் ஆதரவையும் முழுவதுமாக இழந்துவிட வேண்டாம் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story