நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு


நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது:  தமிழக அரசு
x
தினத்தந்தி 15 Nov 2017 3:08 PM IST (Updated: 15 Nov 2017 3:08 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

 சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 9 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் கீழ் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Next Story