பல்லவன் இல்லம் மட்டுமின்றி 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக:போக்குவரத்து அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு
பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக தான் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:
பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை ரூ.30.50 கோடிக்கு அடமானம் வைத்தது திமுக. அதிமுக ஆட்சியில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டது, பராமரிப்புகளுக்காக மட்டும் 53 விருதுகளை தமிழக அரசு பெற்றது.
திமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக திறக்கப்பட்ட பணிமனைகள் 10 மட்டுமே. அதிமுக ஆட்சியில்போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ 10,519 கோடி நிதி வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் ரூ 1,231 கோடி நிலுவை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story