மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்


மீனவர்கள் மீது கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 15 Nov 2017 8:16 PM IST (Updated: 15 Nov 2017 8:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடிக்கு  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

13-ம் தேதி கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பாதுகாப்புத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்.துரதிர்ஷடவசமான இந்த சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story