ஆடிட்டர் வீட்டிற்கு பதில் ஆசிரியர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை
ஆடிட்டர் வீட்டிற்கு பதில் ஆசிரியர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் பின்னர் மன்னிப்பு கேட்டு சென்றனர்
சென்னை
தமிழகத்தில் சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர்.
சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினருக்கு ஜோதிடம் பார்த்து வந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதிநகரை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.
இது போல் கடலூரில் ஆடிட்டர் ஒருவர் வீட்டில் சோதனையிடுவதற்கு பதிலாக ஆசிரியை ஒருவர் வீட்டிலும் சம்பந்தம் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய விவரம் வெளியாகி உள்ளது.
ஆசிரியை வீட்டில் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை வங்கி வங்கியாக அழைத்து சென்று விசாரித்து உள்ளனர். மாலையில் சென்னையில் இருந்து தகவல் வந்ததும் தாங்கள் வீடுமாறி வந்து விட்டதாகவும் மன்னித்து விடுங்கள் என கூறி ஆடிட்டர் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

Related Tags :
Next Story