தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் + "||" + ayalalithaa's death, the inquiry commission has so far received a letter of 70

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இப்போதைய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது வலியுறுத்தினார்.

அதன்படி ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 25–9–2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது’’

அதன்பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் இயங்குவதற்காக எழிலகம் கலச மகால் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது.   ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து போயஸ்கார்டனில் இருந்து விசாரணை தொடங்கப்படும். விசாரணை வெளிப்படையாக நடைபெறும்  என ஆறுமுகசாமி  கூறினார்

விசாரணையை முடிக்க 3 மாத காலமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் விறுவிறுப்பாக விசாரணையை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம் வந்துள்ளது. என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இதுவரை தி.மு.கவின் டாக்டர் சரவணன் உள்பட  8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் என தெரியவந்து உள்ளது.

வரும் 22-ம் தேதி, சரவணன் ஆஜராகி விளக்கமளிக்க அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம்கொடுக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.