ஆளுநர் ஆய்வு என எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றச்சாட்டு: முதல் அமைச்சர் பழனிசாமி


ஆளுநர் ஆய்வு என எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றச்சாட்டு:  முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 18 Nov 2017 6:57 PM IST (Updated: 18 Nov 2017 6:57 PM IST)
t-max-icont-min-icon

ஆளுநர் ஆய்வு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் கோவைக்கு வருகை தந்து ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஆளுநர் கோவையில் ஆய்வு செய்கிறார் என சர்ச்சை எழுந்தது.  அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, ஆளுநர் ஆய்வு செய்துள்ளார் என்பதே தவறு.  ஆளுநர் ஆய்வு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், அரசின் திட்டங்களை ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என கூறியுள்ளார்.


Next Story