நாகை மீனவர்கள் 4 பேரை விரட்டியடித்தது இலங்கை கடற்படை


நாகை மீனவர்கள் 4 பேரை விரட்டியடித்தது இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 19 Nov 2017 9:18 AM IST (Updated: 19 Nov 2017 11:05 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை விரட்டியடித்துள்ளனர்.

நாகை,

நாகை மீனவர்கள் 4 பேர் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது.

சமீபத்தில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாகை மீனவர்கள் 4 பேரை அத்துமீறி மீன்பிடித்துள்ளனர் என கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.


Next Story