கர்நாடகாவில் மது விலக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை: முதல் மந்திரி சித்தராமையா


கர்நாடகாவில் மது விலக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை: முதல் மந்திரி சித்தராமையா
x
தினத்தந்தி 21 Nov 2017 8:17 PM IST (Updated: 21 Nov 2017 8:17 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மது விலக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என்று முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,


கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 13–ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 7–வது நாள் கூட்டம் இன்று கூடியது. இன்றைய கேள்வி நேரத்தின் போது,  பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில், 

மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தியது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதனால் அந்த மாநிலங்கள் மதுவிலக்கை நீக்கின. கர்நாடகத்தில் முன்னாள் முதல்–மந்திரி நிஜலிங்கப்பாவின் ஆட்சியில் மதுவிலக்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆனால் அதை அமல்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே இது வெற்றி பெறும். மதுவிலக்கு குறித்து மத்திய அரசு ஒரு கொள்கையை வகுத்தால் அதற்கு கர்நாடக அரசு ஆதரவு வழங்கும்” இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story