அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்


அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வேண்டும் சரத்குமார் வலியுறுத்தல்
x

புதிய பாடத்திட்ட வரைவு மகிழ்ச்சி அளிக்கிறது: அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வேண்டும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சுமார் 13 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்த மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டமும், 7 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்த உயர்நிலைப்பள்ளி வரையிலான பாடத்திட்டமும், தற்போது மாற்றப்பட்டு புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போதைய மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட மேம்பட்ட பாடத்திட்டமாக உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் குறுகிய காலத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மேம்படுத்தப்படுமானால், மீண்டும் தமிழக பாடத்திட்டம் பின்னுக்கு தள்ளப்படும்.

மாற்றப்பட்டிருக்கும் புதிய பாடத்திட்டத்திற்கு மாணவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். மேலும், மாணவர்களை புதிய பாடத்திட்டத்திற்கு தயார்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளையும், தரத்தினையும் உயர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story