காங்கிரசுடன் மீண்டும் த.மா.கா. இணையுமா? ஜி.கே.வாசன் பதில்
ராகுல்காந்தி தலைவரான பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் த.மா.கா. இணையுமா? என்பது குறித்து ஜி.கே.வாசன் பதிலளித்தார்.
சென்னை,
த.மா.கா.(தமிழ் மாநில காங்கிரஸ்) தலைவர் ஜி.கே.வாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
த.மா.கா. 4-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 25-ந்தேதி(சனிக் கிழமை) திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தற்போது த.மா.கா. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த கூட்டணியிலும் இல்லை. நம்பிக்கையுடன் தனித்துவமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வருங்கால அரசியலில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக இருக்கும். இதற்கான அடித்தள பணிகள் நடக்கிறது.
நான் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கவில்லை. பொறாமையில் எப்படியாவது த.மா.கா.வுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று இதுபோன்று அவதூறு செய்திகள் பரப்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்ற பின்னர் த.மா.கா. மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜி.கே.வாசன் பதிலளித்து கூறும்போது, ‘ராகுல்காந்தியை பொறுத்தவரையில் மிக உயர்ந்த, சிறந்த தேசிய தலைவர் என்பதில் மாற்று கருத்து கிடையாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கிற கட்சி. அதுபோன்ற சூழ்நிலை(இணைப்பு) ஏற்படுகிறதா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்’ என்றார்.
முன்னதாக ஜி.கே.வாசன் முன்னிலையில் மத்தியசென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் சதீஷ்குமார் மற்றும் இளைஞர்கள் த.மா.கா.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story