ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் விசாரணை ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்


ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் விசாரணை ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 22 Nov 2017 2:03 PM IST (Updated: 22 Nov 2017 2:03 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் விசாரணை ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

ஜிஎஸ்டி  வரி குறைப்பிற்கு பிறகும் உணவகங்களில் விலை குறையாமல் இருப்பது குறித்து  புகார் எழுந்தது . இதை தொடர்ந்து ஓட்டல் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காணுவதாக  அமைச்சர் ஜெயக்குமார்  உறுதி அளித்து இருந்தார். அதன் படி இன்று  ஓட்டல் சங்க நிர்வாகிகளுடன்  அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை
நடத்தினார். 

பின்னர்  அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஜிஎஸ்டி வரி அதிகமாக வசூலிக்கப்படாது என ஓட்டல் உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் விசாரணை ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடைபெறும் நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story