ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி 5–ந் தேதி சென்னையில் அமைதிபேரணி டி.டி.வி.தினரகன் தலைமையில் நடக்கிறது
வருகிற டிசம்பர் 5–ந் தேதி அன்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 1–வது ஆண்டு நினைவு தினமாகும்.
சென்னை,
அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வருகிற டிசம்பர் 5–ந் தேதி அன்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 1–வது ஆண்டு நினைவு தினமாகும். ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர். நினைவுநாள் அன்று ஜெயலலிதா தலைமையில், சென்னை அண்ணாசிலையில் இருந்து அமைதிபேரணி நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது.
அதேபோல வருகிற டிசம்பர் 5–ந் தேதி அன்று ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைதிபேரணி நடைபெற உள்ளது. இதற்காக போலீஸ் அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அவரும் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைதிபேரணிக்கு போலீஸ் அனுமதி கிடைக்குமா? என்பது தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story