26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்து முன்னணி அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா நடத்தியவர்கள் மீது வழக்கு போட்டதை கண்டித்து 26-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் நிறுவனர் தலைவர் ராம.கோபாலன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எத்தனையோ பேர் புதிய கட்சிகளை தொடங்கி உள்ளனர். அதேபோன்று புதிய கட்சியை தொடங்க வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு ஆசை வந்துள்ளது பாவம். ரூ.3 கோடியை திருப்பி கொடுக்கவிருப்பதாக கூறுகிறார். யாரிடம் கொடுக்கப் போகிறார்? இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதெல்லாம் தெரியாது. நடிகராக இருந்தார், நல்ல திறமை உள்ளவர் ஆனால் தற்போது டிவி., நிகழ்ச்சி நடத்துகிறார், இதுவே வேடிக்கையாகத் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் வக்கீல் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தென்சென்னை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தியவர்கள் மீது போலீஸ் அதிகாரி ஒருவர் பொய்வழக்குகளை போட்டு உள்ளார்.
சட்டத்தை மீறியதாக கூறி 5 வயது குழந்தை மீதும், மைக்செட் வைக்காத இடங்களில் அபாயகரமான ஒலியை எழுப்பியதாக கூறியும், ஊர்வலத்தை வேகமாக போக சொல்லிவிட்டு, அதனை மீறியதாக கூறியும், 2 சக்கர வாகனத்தில் வந்து ஊர்வலத்தை தடை செய்தது என நியாயம் மற்றும் காரணமில்லாதவற்றை கூறி விழா குழுவினர், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 380 பேர் மீது 40 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேண்டுமென்றே இந்த வழக்குகள் 2 மாதங்களுக்கு பிறகு பதியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை மாவட்டத்திலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இதனை கண்டித்து சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள சிந்தாதிரிபேட்டை பாலம் அருகில் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போடும் அதிகாரி மீது முதல்-அமைச்சர், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளிப்பதுடன், நீதிமன்றத்திலும் முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் உடனிருந்தார்.

Related Tags :
Next Story