ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் இருவர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு மருத்துவர்கள் நாராயணபாபு - மயில்வாகனன் ஆகியோர் ஆஜரானார்கள்
சென்னை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று விசாரணையை தொடங்கியது. விசாரணை ஆணைய அலுவலகத்தில் கூடுதல் ஆவணங்களுடன் திமுக பிரமுகர் டாகடர் சரவணன் வருகை தந்து நேரில் ஆஜரானார். நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்தது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் எப்போழுது பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம் என கூறப்பட்டு உள்ளது.
நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி கூறும் போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார் எப்பொழுது பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரிக்கப்படும் என கூறினார்.
அதன் படி இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன்பு அரசு மருத்துவர்கள் ஆஜரானார்கள். அரசு மருத்துவர்கள் நாராயணபாபு, மருந்துகள் துறை இயக்குநர் மயில்வாகனன் ஆகியோர் ஆணையம் முன்பு ஆஜரானார்கள். அதுபோல் திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் ஆஜரானார்கள்
Related Tags :
Next Story