ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது போயஸ்கார்டனில் பணியில் இருந்த போலீஸ்காரர்கள் யார்? பட்டியல் மாயம்
ஜெயலலிதா முதல்–அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சென்னை,
ஜெயலலிதா முதல்–அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சென்னை போயஸ்கார்டனில் அவருடைய இல்லம் அமைந்துள்ள பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவருடைய வீட்டில் அன்றாடம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் பட்டியல் சேகரிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 22.9.2016 அன்று ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் யார்? என்ற பட்டியல் தற்போது மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். எனவே அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பட்டியலை தேனாம்பேட்டை போலீசாரும், உயர் அதிகாரிகளும் தேடிவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story