ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை
ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி தேர்தல் கமிஷன் இன்று ஆலோசனை நடத்துகிறது.
புதுடெல்லி,
முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறது. டிசம்பர் 14–ந்தேதி இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் என்று தெரிகிறது. தேர்தல் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story