ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப்பதிவு ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல்
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. முதன் முதலாக ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை சந்திக்கிறது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால் அவர் உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது பிளவுபட்ட அ.தி.மு.க. இரு அணிகளாக தேர்தலை சந்தித்தது.
அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இருந்ததால் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் தவிர தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், பா.ஜனதா சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் லோகநாதன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரும் போட்டியிட்டனர். மொத்தம் 62 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
அப்போது டி.டி.வி.தினகரனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.
ஆனால் அந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டி.டி.வி.தினகரன் கைதாகி சிறைக்கு சென்ற பின்னர் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. சசிகலா அணியில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்தனர்.
ஒருங்கிணைந்த இந்த அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்று அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன் இந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தையும் வழங்கி இருக்கிறது. எனவே இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி அ.தி.மு.க. என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.
மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் இது ஆகும்.
டி.டி.வி.தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார். மேலும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் போட்டி மிக கடுமையாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலின் போது டி.டி.வி.தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் இந்த தேர்தலில் அவருக்கு எதிராக பிரசாரம் செய்வார்கள் என்பதால் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story