தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: நடிகர் சசிகுமாரிடம் 2 மணி நேரம் விசாரணை
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜரானார்.
பூந்தமல்லி,
தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் (வயது 43). சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், சசிகுமார் நடத்தி வரும் கம்பெனி புரொடக்சன் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடன் தொல்லை காரணமாக கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அதில் தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியனே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புசெழியனை தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் அன்புசெழியனை பிடிக்க சசிகுமார் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அன்புசெழியன் குறித்து சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நல்லவிதமாக கூறி வந்தனர். இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) ஆஜர் ஆவதாக கூறிய சசிகுமார் நேற்று மாலை 5.40 மணிக்கு திடீரென வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
அவரிடம் துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் சம்பத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. சசிகுமாரிடம் சுமார் 2 மணி நேரம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். அப்போது திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
விசாரணைக்கு பின்னர், சசிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அசோக்குமார் எனது அத்தை மகன். அவனது இறப்பில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. நான் இந்த அளவு வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் அவன். அசோக்குமார் தற்கொலை குறித்து போலீசார் கேட்டார்கள். எனக்கு தெரிந்தவற்றை கூறி உள்ளேன்.
அன்புசெழியன் நல்லவர் என்று சில திரைத்துறையினர் கூறுவது அவர்களது தனிப்பட்ட கருத்து. அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை. அன்புசெழியன் மீது மேலும் பல புகார்கள் வரும்.
இவ்வாறு சசிகுமார் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியதாவது:-
தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விசாரணைக்கு வந்துள்ளேன். முதல் கட்ட விசாரணை முடிந்து உள்ளது. மீண்டும் விசாரணைக்கு வருவேன். படப்பிடிப்பை முடித்து விட்டு வருகிற 29-ந் தேதி விஷால் சென்னை வருகிறார். அவரது ஆலோசனைபடி ஏற்கனவே அனைத்து தயாரிப்பாளர்களையும் சந்தித்து பேசி வருகிறோம்.
சி.வி.குமார் புகார் அளித்து 45 நாட்கள் ஆகி விட்டது. தயாரிப்பாளர்கள் குடும்பமாக இந்த தொழிலை செய்து வருகிறோம். அன்புசெழியனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். விஷால் வந்த பின்பு தயாரிப்பாளர்கள் எல்லாம் கூடி பேசி பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் கொடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
எல்லா பைனான்சியர்களும் கெட்டவர்கள் அல்ல, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பைனான்சியர்கள் சினிமா துறைக்கு துணையாக இருந்து வருகிறார்கள். தொழிலில் ஏற்ற இறக்கம் வரும். காசு கொடுத்தவர்கள் திரும்ப கேட்பது தவறு இல்லை. கேட்கும் விதத்தில் தான் தவறு இருக்கிறது. மற்றவர்களை காயப்படுத்தவோ, துன்புறுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. போலீஸ் விசாரணை திருப்தியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story