மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு


மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2017 3:30 AM IST (Updated: 4 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை நோக்கி வரும் புதிய புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரையின்பேரில், இன்று(திங்கட்கிழமை) முதல் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என ராயபுரம், காசிமேடு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


Next Story