ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு
போட்டியில் இருந்து ‘திடீர்’ விலகல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு அளித்துள்ளார்.
சென்னை,
இந்திய ஜனநாயக கட்சி தன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல் களங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அந்த வகையில், நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. மத்திய சென்னை மாவட்ட தலைவர் லெனின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் பா.ஜ.க.நிர்வாகிகள் என்னை தொடர்புக்கொண்டு, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடாமல் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக கட்சியினர் தேர்தல் பணியாற்றி, அவரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story