தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி: விஷால் பேட்டி


தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி:  விஷால் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2017 8:46 PM IST (Updated: 5 Dec 2017 8:46 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக  அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது. 

இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் முறையீட்டார். இதில் திடீர் திருப்பமாக நீண்ட நேர இழுபறிக்கு பின், விஷாலின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால், தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ நாளை முதல் ஆர்.கே.நகரில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன். நியாயமாக என்ன நடைபெறவேண்டுமோ அதை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்துள்ளது. மனு தாக்கல் செய்வதில் இருந்து மனு ஏற்கப்படும் வரை அனைத்துமே எனக்கு போராட்டம் தான். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கத்தான் செய்யும். முன்மொழிந்த 2 பேரின் கையெழுத்து அவர்களது இல்லை என்ற புகாரில் உண்மை இல்லை. வேட்பு மனு ஏற்கப்பட்டதன் மூலம் நீதி, நேர்மை, நியாயத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது”  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story