விஜயகாந்துக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
விஜயகாந்துக்கு எதிராக ஆலந்தூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கிருந்த செய்தியாளர்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அப்போது, பத்திரிகையாளர்களை விஜயகாந்த் ஒருமையில் பேசி கடுமையாக திட்டினார்.
அவரது கட்சி நிர்வாகியான அனகை முருகேசன், பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக போலீசில் புகார் செ ய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆஜராகவில்லை
இந்த வழக்கு கடந்த 2013-ம் முதல் ஆலந்தூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் ஆலந்தூர் கோர்ட்டு பிடிவாரண்டு வாரண்டு பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், விஜயகாந்த் தரப்பில் நேற்று உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விஜயகாந்த் சார்பில் வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி, விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூர் சென்றுள்ளார். வியாழக்கிழமை (இன்று) தான் அவர் சென்னை திரும்புகிறார். அதேபோல, அனகை முருகேசனுக்கும் உடல்நிலை சரியில்லை. அதனால், இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, இருவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோருக்கு எதிராக ஆலந்தூர் கோர்ட்டு பிறப்பித்துள்ள பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story