சொகுசு கார் இறக்குமதி வழக்கு சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்


சொகுசு கார் இறக்குமதி வழக்கு  சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்
x
தினத்தந்தி 7 Dec 2017 3:41 PM IST (Updated: 7 Dec 2017 3:41 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. கோர்ட் பிறப்பித்துள்ளது.

சென்னை

கடந்த, 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, லண்டனில் இருந்து 'லெக்சஸ்' ரக சொகுசு காரை இறக்குமதி செய்ததில், மத்திய அரசுக்கு, 1.06 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், அவரது உறவினர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு சென்னை சி.பி.ஐ., கோர்ட் 2 வருட சிறை தண்டனை வழங்கியது. 

இதனை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்திருந்தது.உடல்நலக்குறைவால் சரணடைவதில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நடராஜன் விலக்கு பெற்றார்.இந்நிலையில், சரணடைவதில் இருந்து விலக்கு பெற்றதை சம்பந்தப்பட்ட கோர்ட்களுக்கு நடராஜன் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று சொகுசு கார் வழக்கில் நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

Next Story