சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்


சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்
x
தினத்தந்தி 8 Dec 2017 12:45 AM IST (Updated: 7 Dec 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை முடிந்து 9 நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் சென்னை திரும்பினார்.

சென்னை

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக ஆண்டுக்கு ஒரு முறை சிங்கப்பூருக்கு சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் 28–ந் தேதி விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் சென்றார். அவருடைய மனைவி பிரேமலதாவும் உடன் சென்றார்.

சிங்கப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்த், நோயாளிகள் அணியும் சீருடையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை முடிந்து 9 நாட்களுக்கு பிறகு நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவியுடன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது அவரை நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் விஜயகாந்த், பேட்டி எதுவும் கொடுக்காமல் காரில் ஏறிச்சென்று விட்டார்.

Next Story