21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது -கடற்படை விளக்கம்
21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கடற்படை விளக்கம் அளித்து உள்ளது
சென்னை
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது:-
ஒகி புயல் காரணமாக 60க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற 537 மீனவர்களை இதுவரை காணவில்லை . ஒகி புயலால் 3,933 ஹெக்டேரில் பல வகையான பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.புயல் காரணமாக 5,032 வீடுகள், 12,500 மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன.
குமரியில் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று கடலுக்குச் சென்றவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது . குஜராத்தில் உள்ள தமிழக மீனவர்களுக்கு 1000 லிட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. 14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 192 கி.மீ தொலைவுக்கு 259 ஊராட்சி ஒன்றிய சாலைகள் சேதமடைந்துள்ளன. உடனடி போக்குவரத்துக்காக 8.34 கி.மீ தொலைவுள்ள 13 சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. எனகூறினார்.
கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:-
இதுவரை 268 தமிழக மீனவர்கள் உள்பட 622 மீனவர்கள் மீட்கபட்டு உள்ளனர். 625 கி.மீ., தொலைவு வரை கடலில் சென்று மீனவர்களை தேடி வருகிறோம். 21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இலங்கை, மாலத்தீவுகளிலும் மீனவர்கள் வந்துள்ளார்களா என விசாரித்துள்ளோம்.மீனவர்களை தேடும் பணியில் கடற்படையின் 12 போர்க்கப்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. மீனவர்கள் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும். என கூறினர்.
தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அறிக்கையை டிச.12க்குள் சமர்பிக்கும் வகையில் முழுவீச்சில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது .
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதத்தில் இதுவரை 740 ஹெக்டர் பரப்பளவிலான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நிறைவு
மீதமுள்ள பயிர் சேதங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி 90 அலுவலர் குழுக்கள் மூலம் நடக்கிறது.
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 287 ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம்
53 ஹெக்டர் பரப்பளவில் தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன.
3,623 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story