நெசவு தொழிலாளி, மனைவி, மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அருகே நெசவு தொழிலாளி மனைவி, மகளுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
சேலம்,
சேலம் அருகே ஜலகண்டாபுரம் மலையம்பாளையத்தில் வசித்து வந்தவர் நெசவு தொழிலாளி சேகர்(வயது 65). மனைவி காந்திமதி (60). இவர்களுக்கு ஹேமலதா(35), பத்மநாபன்(32), கீதா(25) என 3 பிள்ளைகள்.
ஹேமலதா(35) திருமணமாகி, குழந்தையின்றி கணவரை பிரிந்து வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். பத்மநாபன், காதல் திருமணம் செய்துகொண்டு தனியே வசித்து வருகிறார். கீதா, நர்சிங் படித்து முடித்து வெளியூரில் நர்சாக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தால், வீட்டின் விட்டத்தில் சேகர், மனைவி காந்திமதி, மகள் ஹேமலதா ஆகியோர் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கிடந்த தம்ளரில் விஷ மருந்து கலந்து குடித்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே அவர்கள் விஷம் குடித்தும், எங்கே உயிர் பிழைத்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த விபரீத முடிவுக்கு சென்றது ஏன் என்பது பற்றிய அவர்களது கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மூத்த மகள் கணவருடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து வந்ததாலும், ஒரே மகன் காதல் மணம் செய்து தனிக்குடித்தனம் போய்விட்டதாலும், மனம் உடைந்துபோய் சேகர், காந்திமதி இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்; தங்களுக்கு பின்னர் மகளை கவனிக்க ஆளற்ற நிலையில் அவரையும் தங்களுடன் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
3 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம், ஜலகண்டாபுரம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story