சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 10 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனார்கள்


சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 10 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனார்கள்
x
தினத்தந்தி 9 Dec 2017 2:30 AM IST (Updated: 9 Dec 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 10 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனார்கள்.

சென்னை,

சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 10 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆனார்கள். இதில் 3 பேருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனிதநேயம் மையத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வகையிலான மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில், இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 2 ஆயிரத்து 955 பேர் பல்வேறு பணிகளில் உள்ளனர்.

2016-17-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் இறுதி தேர்வில் மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 43 பேர் பணி ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக 10 பேரும், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக 6 பேரும், ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளாக 6 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது.

ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கீடு பெற்ற மனிதநேயம் மாணவர்கள் 10 பேரில் எம்.பிரதாப், சி.தினேஷ்குமார், இ.பத்மஜா ஆகிய 3 பேருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், நவீன்பாத் என்பவருக்கு அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகாவிலும், தயான்சந்திரா, கே.எஸ்.விஸ்வநாதன், பிரவீன் ஆதித்யா ஆகிய 3 பேருக்கு ஆந்திராவிலும், இலக்கியாவுக்கு கேரளாவிலும், அருண்மொழிக்கு உத்தரபிரதேச மாநிலத்திலும், பிரியதர்ஷிணுக்கு மேற்கு வங்காள மாநிலத்திலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story