கூடுதல் ஆட்களை அழைத்து வந்தால் தேர்தல் பிரசாரத்துக்கு தடை ஆர்.கே.நகரில் புதிய கட்டுப்பாடு
கூடுதல் ஆட்களை அழைத்து வந்தால் தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படும் என ஆர்.கே.நகரில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்கு முன்பு வேட்பாளர்களுடன் எத்தனை பேர் வருகின்றனர் என்பது பற்றிய தகவலை ஆன்லைன் வழியாக தேர்தல் கமிஷனிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.
அனுமதி பெற்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக பிரசாரத்திற்கு ஆட்கள் வருவது குற்றமாகும். அவ்வாறு கூடுதலாக வந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு தினசரி ஆகும் செலவு ஆகியவை கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். அந்த நபர்கள் வெளியூர் ஆட்கள் என்றால், அவர்களின் பயணச் செலவு, தங்கும் செலவு, சாப்பாட்டுச் செலவு ஆகியவை வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
மீண்டும் மீண்டும் இந்தத்தவறை வேட்பாளர்கள் செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்படும்.
வெற்றி பெற்றால்கூட, அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு இதுபோன்ற விதிமீறல்கள் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
தெருக்களில் கட்சி சார்பில் மேஜை, நாற்காலிகள் போட்டு வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச்சாவடிகள் உடனே அப்புறப்படுத்தப் படும்.
12-ந்தேதியில் இருந்து வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பூத் சிலிப் களை வழங்கத் தொடங்குவார். அதில் வாக்காளரின் விவரங்கள், புகைப்படம் இருக்கும். இந்தப் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.
அந்த பூத் சிலிப்கள் அல்லது தேர்தல் கமிஷனின் ஆவணங்கள் ஏதாவது அரசியல் கட்சியினரிடம் இருப்பது தெரியவந்தால், அந்த அலுவலர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்படுவார்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுள்ள 1,947 வாக்காளர்களுக்கு ஒரு இடத்தில் மட்டும் பூத் சிலிப் வழங்கப்படும். இரட்டை பதிவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிக்காக 11-ந்தேதியில் இருந்து 15 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளது. துணை ராணுவம் வரும்வரை ஆர்.கே.நகர் தொகுதி பாதுகாப்புப் பணிக்கு கூடுதல் போலீசார் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 7 வழக்குகளும், பணப்பட்டுவாடா தொடர்பாக இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் செலவீனப் பார்வையாளரான ஐ.ஆர்.எஸ். அதிகாரி பிரணவ் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் 2 செலவீனப் பார்வையாளர்கள் வரவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story