தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது - அன்புமணி ராமதாஸ்


தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 9 Dec 2017 1:29 PM IST (Updated: 9 Dec 2017 1:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.

சென்னை

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கிய பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விஏஓ முதல் முதல்வர் எடப்பாடி  வரை அனைவரும் ஊழல் செய்கிறார்கள்.  மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 24 ஊழல்கள் குறித்த புகார் அறிக்கையை ஆளுநரிடம் சமர்பித்துள்ளேன், நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். மணல் குவாரிகளில் அதிகளவில் ஊழல் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் ரூ. 4.50 லட்சம் கோடி  ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story