சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Dec 2017 5:28 PM IST (Updated: 9 Dec 2017 5:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட, தியாகங்கள் பல புரிந்த பாரம்பரிய பெருமைமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை, தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பிலும், கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சிகொள்கிறேன்.

நாட்டின் பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம், சமூக நீதி மற்றும் ஜனநாயக அடிப்படை ஆகியவற்றை பாதுகாத்து, செழுமைப்படுத்தி மேலும் முன்னெடுத்து செல்வதற்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் பெருமைக்குரிய சோனியாகாந்தி, உலக அரங்கில் இந்தியா தனி சிறப்பை நிலை நிறுத்திக்கொள்வதற்காக, மதச்சார்பற்ற, சோ‌ஷலிச–ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திறன்வாய்த்திட பெற்ற தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தலைவர் கருணாநிதியின் கோரிக்கையினை ஏற்று, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த சோனியாகாந்தி, முழுமையான ஆரோக்கியத்துடனும், நிறைவான மகிழ்வோடும் மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் எனவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை–எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனவும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story