தா.பாண்டியனுக்கு ‘திடீர்’ உடல்நல குறைவு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு திடீர் என்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு திடீர் என்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெறுவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தா.பாண்டியனின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு சளியின் தாக்கம் அதிகம் இருந்ததும், மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாச கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 நாட்களில் சிகிச்சை முடிந்து தா.பாண்டியன் வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story