பதவிக்கு கால நீட்டிப்பு வழங்காமல் பணி மூப்பு அடிப்படையில் கல்வி இயக்குநர் பதவி வழங்கப்பட வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
பதவிக்கு கால நீட்டிப்பு வழங்காமல் பணி மூப்பு அடிப்படையில் கல்வி இயக்குநர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கல்லூரிக் கல்வி இயக்குநர் பணி நியமனத்தில், தமிழ்நாடு அரசு பணி மூப்பு அடிப்படையில் மூத்த பேராசிரியர் ஒருவரை அரசு விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்வது வழக்கம். ஆனால், தற்போதுள்ள கல்லூரி கல்வி இயக்குநர் பதவிக்கு காலநீட்டிப்பு வழங்குவது என்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்து மிகச் சரியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது.
எனவே, கல்வி இயக்குநர் பதவிக்கு கால நீட்டிப்பு வழங்காமல், பணி மூப்பு அடிப்படையில் மூத்த பேராசிரியர்களுக்கு கல்வி இயக்குநர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும்; சமூக நீதி காக்கும் வகையில் எஸ்.சி., எஸ்.டி. பேராசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இணை இயக்குநர் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் எனவும், 63–க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பதவிகளை வெளிப்படைத் தன்மையுடன் தகுதியான பேராசிரியர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story