தாயார் கொலை வழக்கில் தஷ்வந்தை சிறையில் அடைக்க போலீசாருக்கு மும்பை கோர்ட்டு 3 நாள் அவகாசம்
தாயாரை கொன்ற வழக்கில் மும்பையில் பிடிபட்ட தஷ்வந்தை தமிழக போலீசார் சிறையில் அடைக்க மும்பை கோர்ட்டு 3 நாள் அவகாசம் அளித்தது.
பூந்தமல்லி,
தாயாரை கொன்ற வழக்கில் மும்பையில் பிடிபட்ட தஷ்வந்தை தமிழக போலீசார் சிறையில் அடைக்க மும்பை கோர்ட்டு 3 நாள் அவகாசம் அளித்தது. இதையடுத்து அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்(வயது 24) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்தார். அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாயார் சரளாவை கொன்று 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தஷ்வந்த் மும்பையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படையினர் மும்பைக்கு விரைந்தனர். அங்கு சூதாட்ட விடுதி ஒன்றில் விளையாடிவிட்டு வெளியே வந்த அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை மும்பை பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வருவதற்காக தனிப்படையினர் அழைத்து வந்தனர். வழியில், அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது போலீசாரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் மீது மும்பை பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவர் தப்பிக்காமல் இருக்க கை, கால்களை சங்கிலியால் போலீசார் கட்டிப்போட்டனர்.
அவரை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையினர் மும்பை விரைந்தனர்.
தஷ்வந்தை சென்னை மற்றும் மும்பை போலீசார் பலத்த பாதுகாப்புக்கு இடையே கை, கால்களில் சங்கிலியால் கட்டி அதே நிலையில் மும்பை பாந்திரா மாஜிஸ்திரேட்டு முன்பாக நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மும்பையில் தமிழக போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய வழக்கில் தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கினார்.
பின்னர் கொலை வழக்கில் அவரை தமிழக சிறையில் அடைக்க போலீசாருக்கு 3 நாள் அவகாசம் அளித்தும் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து தஷ்வந்தை விமானம் மூலம் போலீசார் நேற்றிரவு 10.15 மணிக்கு சென்னைக்கு கொண்டு வந்தனர்.
சென்னையில் யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தாயாரை கொலை செய்து விட்டு அவர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யவும், தாயாரை கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அதனை வீடியோ பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் மும்பை நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “தாயார் கொலை குறித்து தஷ்வந்திடம் 3 நாட்கள் விசாரிப்போம். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்போம்” என்றார்.

Related Tags :
Next Story