ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டிஉள்ளார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரசாரம், வாகனங்கள் அணிவகுப்பு, பூத் சிலிப் விநியோகம் போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். சென்னை ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் போராட்டமும் நடைபெற்றது.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்து பேசுகையில், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story