டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக இரும்புக் கடைக்குதான் போகும் - அமைச்சர் ஜெயக்குமார்
டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக இரும்புக் கடைக்குதான் போகும் என் அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இடைத்தேர்தலில் சுயட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. தொப்பி, விசில், கிரிக்கெட்பேட் சின்னங்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்டதால் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. டிடிவி தினகரன் தொடர்ச்சியாக பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க கோரியும், அரசு மீது குற்றம் சாட்டியும் பிரசாரம் செய்து வருகிறார். பிரஷர் குக்கர் ஒதுக்கப்பட்டதும் துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம் என டிடிவி கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு, பிரஷர் குக்கர் பிரஷர் கொடுக்கும் என கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பட்டது. ஜெயக்குமார் பதிலளிக்கையில் டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக இரும்புக் கடைக்குதான் போகும் என்றார்.
Related Tags :
Next Story