மீனவ குடும்பங்களுக்கு ஓரிரு நாளில் நிவாரண தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் -கலெக்டர்
புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஓரிரு நாளில் நிவாரண தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் குமரி மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆழ்கடலில் குறைந்தது 10 நாள் முதல் 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன் பிடிப்பார்கள். சில படகுகள் அதிகாலையில் கடலுக்கு சென்று இரவில் கரை திரும்பும். இன்னும் சில படகுகள் 2 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள். குறைந்த நாட்களில் கரை திரும்பும் மீனவர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர்.
ஆனால் 13 வள்ளங்களில் மீன் பிடிக்கச் சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 பேரின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஓரிரு நாளில் நிவாரண தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story