ஏழை மக்களுக்கு 400 சதுரடியில் வீடுகள் கட்டித் தரப்படும் தேர்தல் பிரசாரத்தில், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 400 சதுரடியில் வீடுகள் கட்டி தரப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதுவண்ணாரபேட்டை பகுதிகளில் நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக ஏ.இ.கோவில் தெரு சந்திப்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் பிரசாரத்தை தொடங்கினர். அவர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்பட நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஜெயலலிதா முதல்-அமைச்சர் அரியணை ஏறுவதற்கு காரணமாக இருந்த இத்தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவர் ஏற்கனவே அறிவித்தபடி, படித்த இளம்பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும். அதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை-எளிய மக்களுக்கு 400 சதுரடி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘மக்கள் குறைகளை தீர்ப்பதில் பிரதிபலன் பாராமல் பணியாற்றும் மதுசூதனனுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றிய இத்தொகுதி மக்களுக்கு இந்த அரசு நன்றிக் கடன்பட்டு இருக்கிறது. எனவே இந்த தொகுதிக்காக ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.’ என்றார்.

Related Tags :
Next Story