கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி


கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி
x
தினத்தந்தி 12 Dec 2017 8:59 AM IST (Updated: 12 Dec 2017 8:59 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் அமைச்சர் பழனிச்சாமி இன்று பார்வையிடுகிறார்.

சென்னை,

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில்  4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்ட மக்களை முதல் அமைச்சர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் பழனிச்சாமி கன்னியாகுமரி செல்கிறார். 

சென்னையில் இருந்து 10.15 மணிக்கு விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி செல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம், சுங்கான் கடை, மார்த்தாண்டம், குளச்சல் சின்னத்துறை, உள்ளிட்ட பகுதிகளில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். முதல் அமைச்சர் பழனிசாமி வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story