புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என கவர்னரிடம் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை
கவர்னர் பன்வாரிலால் உடனான சந்திப்புக்கு பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி கவர்னரிடம் விளக்கினேன். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவிட வலியுறுத்தியுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரினேன். எங்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். கோரிக்கைகளை பிரதமருக்கு அனுப்பி வைப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார். காணாமல்போன மீனவர்கள் குறித்த சரியான கணக்கு அரசிடம் இல்லை.
மாயமான மீனவர்கள் குறித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் புயல் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. கன்னியாகுமரி சென்ற முதலமைச்சர், பெயரளவுக்கே ஆய்வு செய்துள்ளார். மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை முதலமைச்சர் முதலில் நிறைவேற்ற வேண்டும் .
பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் என அனைவருக்கும், உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story