இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற கொள்ளையன் நாதுராமை உயிருடன் பிடிக்க முயற்சி
இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற கொள்ளையன் நாதுராமை உயிருடன் பிடிக்க முயற்சி தமிழக-ராஜஸ்தான் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் எப்படி சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதில் மாறுபட்ட இருவேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது அறைக்குள் இருந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டதாகவும் அதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிர் இழந்ததாகவும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் கொள்ளையர்களை தேடி தமிழக போலீசார் சென்ற இடம் செங்கல்சூளை. கொள்ளையன் நாதுராமை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அவனை வேனில் ஏற்றினார் என்றும் அந்த சமயத்தில் நாதுராம் திடீரென பெரியபாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ராஜஸ்தான் சென்றுள்ள சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.
தமிழக போலீசாரை நாதுராம் உறவினர்களும் தாக்கி உள்ளனர்.
கொள்ளையன் சுட்டு கொன்ற துப்பாக்கியுடன் ராம்புரா பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாதுராமை உயிருடன் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story