பணப்பட்டுவாடா விவகாரம்: தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை


பணப்பட்டுவாடா விவகாரம்:  தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Dec 2017 11:39 AM IST (Updated: 17 Dec 2017 11:39 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என புகார் எழுந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என புகார் எழுந்தது.  இதனை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி பத்ரா அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் பணப்பட்டுவாடா புகார் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story