ஜனாதிபதி, 23–ந் தேதி தமிழகம் வருகிறார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 23–ந் தேதி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.
சென்னை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 23–ந் தேதி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக ராமேசுவரத்துக்கு செல்கிறார். ராமேசுவரம் கோவில், அப்துல் கலாம் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
பின்னர், அங்கிருந்து மதுரைக்கு சாலை வழியாக வந்து, மதுரையில் இருந்து விமானம் மூலம் ஜனாதிபதி சென்னைக்கு வருகிறார். 23–ந் தேதி மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் தனியார் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். 24–ந் தேதி காலையில், குறிப்பிட்ட சிலரை சந்தித்து பேசிவிட்டு, காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
Related Tags :
Next Story