ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விதிமீறல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெறும் விதிமீறல்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் கூடுதலாக துணை ராணுவப்படையை வரவழைக்க வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுக்க தொகுதி முழுவதும் உள்ள அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆர்.கே.நகர் தொகுதியில் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமே அமைக்கப்படும். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பதற்றம் நிறைந்ததாக உள்ளதால், தேர்தலை நியாயமாக நடத்த மொத்தம் 107 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோக, துணை ராணுவ வீரர்கள் இடம்பெற்றுள்ள வீடியோ படம் எடுக்கும் தனிக்குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் சுற்றி வந்து படம் பிடிப்பார்கள்.
மேலும், மத்திய அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ள பறக்கும் படைகளும் தொகுதியை சுற்றி வருகிறது. இந்த பறக்கும் படை அதிகாரிகள் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, வாகனங்கள் எங்கு செல்கின்றன? என்பதை கண்காணிக்கப்படுகிறது. மேலும், அந்த வாகனங்களுக்கு முன்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
புகார் வந்ததும் இந்த பறக்கும் படை அதிகாரிகள் எவ்வளவு விரைவாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதையும் அந்த கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இதேபோல 50 மோட்டார் சைக்கிள்களிலும், பறக்கும் படை அதிகாரிகள் தொகுதியை சுற்றி வருகின்றனர்.
15 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மூத்த அதிகாரிகள் 7 பேர் மேற்பார்வையாளர்களாக இந்த தொகுதியில் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் விதிமுறை மீறல்களை தடுக்க, முக்கிய தெருக்களில் 225 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மனுதாரர் கேட்பதுபோல, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடியாது. அதற்கு பெரும் தொகை செலவு செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், கேமராக்களை பொருத்த போதிய காலஅவகாசமும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 256 ஓட்டுச் சாவடிகளில், தேர்தலின்போது மக்கள் ஓட்டுப்போடுவதை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த 256 ஓட்டுச்சாவடிகளிலும் தலா ஒரு நுண் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டுப்பதிவு குறித்து அவ்வப்போது தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையை அனுப்பி வைப்பார்.
பணப்பட்டுவாடாவை, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இந்த தொகுதி முழுவதும் 12-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் உள்ள வங்கிகளில் உள்ள கணக்குகளின் பண பரிவர்த்தனையையும் கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் எளிதில் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அதற்குரிய தொலைப்பேசி எண்ணும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதன்பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 968 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது சாத்தியம் இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், இந்த வழக்கை தி.மு.க தொடர்ந்துள்ளது. அதேபோல, ஓட்டுக்காக அனைத்து வாக்காளர்களும் லஞ்சம் வாங்குகின்றனர் என்று தி.மு.க சித்தரிக்கின்றது’ என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் மனுதாரருக்கு கிடையாது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு சிறப்பு பார்வையாளர் விக்ரம் பாத்ரா வந்த நாளில் மட்டும் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் பண பட்டுவாடா நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை படித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, ‘ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே ஒருமுறை இடைத்தேர்தல் ரத்தாகியுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறை தேர்தல் விதிமுறைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என்பதை நம்புகிறேன். ஜனநாயக முறையில் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படையாகவும் தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story