ஆளுங்கட்சிக்கு பாதுகாப்பாக இருந்த போலீஸ், தேர்தல் அதிகாரிகள் பட்டியல் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை மு.க.ஸ்டாலின்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஆளுங்கட்சிக்கு பாதுகாப்பாக இருந்த போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் உள்ளது.
சென்னை,
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஆளுங்கட்சிக்கு பாதுகாப்பாக இருந்த போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பட்டியல் உள்ளது. அவர்கள் மீது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், அம்பேத்கார் நகர் 4-வது தெரு, பாரதியார் நகர் பிரதானசாலை, திருவள்ளுவர் நகர் 4-வது தெரு, எழில்நகர் 9-வது தெரு ஆகிய இடங்களில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்கு சேகரித்தார்.
ஹரிநாராயணபுரம் பெருமாள்கோவில் அருகே வாக்காளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் நாம் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. இதற்காகத்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவில்லாமல் இருந்ததாக அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார். ஆனால், உண்மையை மறைத்து ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாகவும், இட்லி சாப்பிட்டதாகவும், உடற்பயிற்சி செய்துவருவதாகவும், உண்மைக்கு புறம் பான தகவல்களைத்தான் தெரிவித்தார்கள். அதையும் அ.தி.மு.க.வினர் தான் சொன்னர்கள்.
மூச்சு, பேச்சற்ற நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட ஜெயலலிதாவிற்கு 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் வைத்து என்ன சிகிச்சை அளித்தீர்கள்? இதற்காக கோடிக்கணக்கில் மருத்துவ கட்டணமாக கேட்கிறீர் களே? என்று ‘வாட்ஸ்- அப்’களில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உப்பு சத்தியாகிரகத்தின்போது இந்தப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் காந்தி தங்கியிருக்கிறார். இந்த பெருமை இந்த பகுதிக்கு உண்டு. தண்ணீர் பிரச்சினை, குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்ற பல்வேறு பிரச் சினைகள் இங்கு இருக்கிறது. தி.மு.க. தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆளும் கட்சிபோல் செயல் படுகிறது.
மருதுகணேஷ் மட்டும் இந்த தொகுதியின் வேட்பாளர் அல்ல. பக்கத்து தொகுதியில் உள்ள நானும் உங்களுடைய வேட்பாளர் தான். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த தொகுதியின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாடுபடுவோம். முதல்-அமைச்சரை தேர்ந்தெடுத்த தொகுதிக்கே இந்த லட்சணம் என்றால், தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளின் நிலை என்னவென்று உங்களுக்கு தெரியும்.
ஆர்.கே.நகர் தொகுதி என்னுடைய வளர்ப்பு பிள்ளை. இந்த பிள்ளையை வளர்க்க மருதுகணேசை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதியார் நகரில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் பணம் கொடுக்க பாதுகாப்பாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியல் கிடைத்துள்ளது. இன்னும் 3 மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடைபெற்று, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. தலைவர் கருணாநிதி போல நான் யாரையும் மன்னிக்கமாட்டேன்” என்றார்.

Related Tags :
Next Story