ஒகி புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் பழனிசாமி கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்


ஒகி புயல் பாதிப்பு:  முதல் அமைச்சர் பழனிசாமி கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 19 Dec 2017 8:13 AM IST (Updated: 19 Dec 2017 8:13 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயல் பாதிப்பினை பார்வையிட பிரதமர் மோடி வரும் நிலையில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த நவம்பர் இறுதியில் ஒகி புயல் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதனால் தமிழகத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.  தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வருகிறார். அப்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.

கவரட்டி, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் நிவாரணப்பணிகளை பார்வையிடுவதோடு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.

பிரதமர் வருகையை அடுத்து முதல் அமைச்சர் பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Next Story