வாக்காளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


வாக்காளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2017 2:45 AM IST (Updated: 20 Dec 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு வேட்பாளருக்கு ஆதரவான அல்லது எதிரான எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளின்படி, சமூக வலைத்தளங்களில் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான எந்தவொரு விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம்., ரேடியோ, ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’, ‘டுவிட்டர்’ போன்றவை வழியாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லக்கூடாது.

மேலும், வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு வேட்பாளருக்கு ஆதரவான அல்லது எதிரான எஸ்.எம்.எஸ். அனுப்பி அச்செய்தியை பலருக்கு அனுப்பினால் (பணம் கிடைக்கும் என்பதால்), அதன் உண்மையான நோக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. 

Next Story