‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றம்’ ராஜேஷ்லக்கானி பேட்டி
‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டது தண்டனைக்குரிய குற்றம்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
சென்னை,
ஜெயலலிதா சிகிச்சை பெற்றது போன்ற வீடியோவை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ள 48 மணி நேரத்துக்குள் வெளியிட்டது தண்டனைக்குறிய குற்றம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு, அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு இருக்கிறாரே. 21-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் இதுபோன்ற வீடியோவை வெளியிட முடியுமா?
பதில்:- மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் 126(1)(பி) பிரிவின்படி இது குற்றமாகும். அதாவது, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு முன்பிருந்து 48 மணி நேரத்துக்குள் தேர்தல் தொடர்புடைய பொதுக்கூட்டம் நடத்துவது, அதில் பங்கேற்பது, தேர்தல் தொடர்புடையவற்றை சினிமா மூலமாகவோ, தொலைக்காட்சி போன்ற உபகரணங்கள் மூலமாகவோ வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தத் குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றமும் அதனுடன் சேர்கிறது. ஏனென்றால், தேர்தல் தொடர்புடைய ஒரு வீடியோவை வெளியிட வேண்டுமானால், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள மீடியா சான்றளிக்கும் குழுவின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அதையும் அவர் பெறவில்லை.
கேள்வி:- இந்த குற்றத்துக்காக என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்க இருக்கிறீர்கள்?
பதில்:- இதுசம்பந்தமாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்.
கேள்வி:- இந்த குற்றத்துக்காக யார்-யார் மீது வழக்குபதிவு செய்யப்படும்?
பதில்:- வெற்றிவேல் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்படும்.
கேள்வி:- இது தேர்தல் தொடர்புடைய வீடியோ என்று எந்த அடிப்படையில் கூற முடியும்?
பதில்:- தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று சட்டமும், விதிகளும் கூறுகின்றன. அ.தி.மு.க.வின் தலைவராக இருந்த ஜெயலலிதா படத்தை இந்த தேர்தலில் இரண்டு தரப்பினரும் பிரசாரத்துக்காக பயன்படுத்தினர்.
இந்த தேர்தலில் ஜெயலலிதா முக்கிய பங்கு வகிக்கிறார். அவரது பெயரை பிரசாரத்தில் பயன்படுத்தினர். எனவே அவர் இந்த தேர்தலுக்கு நேரடி தொடர்புடையவர் ஆகிறார்.
எனவே வாக்குப்பதிவுக்கு 48 மணிநேரத்துக்கு உட்பட்ட நேரத்தில் தேர்தலுக்கு நேரடி தொடர்புடைய ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது குற்றமாகும். சட்டப்படி இதுவும் நேரடி தேர்தல் பிரசாரமாகத்தான் கருதப் படும். அதன்படி அதை டி.வி.சேனல்கள் ஒளிபரப்பு வதும் குற்றமே.
கேள்வி:- ஜெயலலிதாவின் வீடியோவை வெற்றிவேல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வெளியேதானே வெளியிட்டார். பின்னர் அதை எப்படி குற்றச்சாட்டாக எடுக்க முடியும்?
பதில்:- அவர் எங்கு வெளியிட்டிருந்தாலும் அது அந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள டி.வி.சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்தலை பாதிக்கும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் விதிகளின்படி இது குற்றமாகிறது.
கேள்வி:- ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டாலே அதை குற்றமாக தேர்தல் கமிஷன் கருதுமா?
பதில்:- வாக்குப்பதிவுக்கு முன்பு 48 மணி நேரத்துக்குள் அந்த வீடியோவை வெளியிட்டதால்தான் அதில் தேர்தல் கமிஷன் தலையிடுகிறது. பிரசாரம் அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டிருந்தால் அதில் தேர்தல் கமிஷன் தலையிட்டிருக்காது.
அப்போது அதை வெற்றிவேல் வெளியிட்டிருந்தால் மற்ற சில கட்சிகள் அதுபற்றி புகார் செய்திருக்கும். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றிருக்கும். ஆனால் இது அப்படி நடக்கவில்லை.
சட்டத்தையும் விதிகளையும் மீறி 48 மணிநேரத்துக்கு உட்பட்ட காலகட்டத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், இதில் தேர்தல் கமிஷனே புகார்தாரராக ஆக வேண்டியதுள்ளது.
கேள்வி:- இந்த குற்றச்சாட்டினால் யாராவது ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் இருந்து தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடுமா?
பதில்:- யாருக்கும் தகுதி இழப்பு நேரிடாது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பதால் மட்டுமே தகுதி இழப்பு செய்ய முடியாது. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட பின்பு வேண்டுமானால், தீர்ப்பின் அடிப்படையில் அது முடிவு செய்யப்படும்.
கேள்வி:- டி.வி.சேனல்கள் அந்த வீடியோவை வெளியிடக்கூடாது என்றால், சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ தீயாக பரவிக்கொண்டிருக்கிறதே.
பதில்:- டி.வி.சேனல்கள் அனைத்துக்கும் ஜெயலலிதா சிகிச்சை சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிடக்கூடாது என்ற நோட்டீசை அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி வெளியிட்டுள்ளார். தேர்தலை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கக்கூடும் என்பதால் உடனடியாக அது சம்பந்தப்பட்ட ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ள மீடியாக்கள் அனைத்துக்குமே ஒளிபரப்பை நிறுத்தும்படி நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அச்சு ஊடகங்களுக்கு விதிவிலக்கு உள்ளது. அச்சு ஊடகங்களை இந்த சட்டம் தடை செய்யவில்லை.
கேள்வி:- வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பற்றி அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார். எனவே அதுவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குற்றமாகுமா?
பதில்:- ஆனால் அவர் அப்போது தனக்கு சாதகமாக ஓட்டு கேட்கவில்லையே.
கேள்வி:- வெற்றிவேலும் வீடியோவை வெளியிட்ட போது ஓட்டு கேட்கவில்லை.
பதில்:- ஆனால் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட காலகட்டம்தான், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றமாகிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Tags :
Next Story