சாதிக்பாட்சா மனைவி புகார்: வக்கீல்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
சாதிக் பாட்சா மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வக்கீல்கள் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
2ஜி முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி ஏ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா. இவரை, 2ஜி வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர். இதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டார்.
சாதிக் பாட்சாவின் மனைவி ரேகாபானு சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், வக்கீல்கள் கவுதமன், குமார் ஆகியோர் மீது புகார் செய்தார். இதனடிப்படையில் அவர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், வக்கீல்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘எங்களுக்கு வக்கீல் கட்டணம் தராமல் ஏமாற்றிய கெவின் என்பவரது தூண்டுதலின் பேரில் தான் ரேகாபானு எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்காமல், புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரத்தில், அவசர கதியில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஆர்.சகாதேவன், திருவேங்கடம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி, வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தார். மனு மீதான விசாரணையை வருகிற பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Tags :
Next Story