தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்ததால் பெண் அதிகாரி தற்கொலை
தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்ததால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்ததால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் அவரது வளர்ப்பு தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை காலனியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 22). என்ஜினீயரிங் படித்துள்ளார். மாணிக்காயி (45) என்பவர் தனக்கு குழந்தை இல்லாததால், சிறுவயது முதல் மாரியம்மாளை தத்து எடுத்து வளர்த்து வந்தார். பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் உள்ள தபால் அலுவலகத்தில் மாரியம்மாள் கிளை அலுவலக அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) பணியாற்றி வந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரத்தை அஞ்சல் அலுவலகத்தில் திரும்ப செலுத்தி அதனை மாரியம்மாள் சரி செய்தார். ஆனால் சரியாக பணியாற்றியும் எப்படி கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்தது என்று தெரியாமல் மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மனவேதனை தாங்க முடியாமல் கடந்த 16-ந் தேதி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) மாரியம்மாள் தின்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த சில நிமிடங்களில் வளர்ப்பு தாய் மாணிக்காயி அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார். நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கள்ளை காலனிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாரியம்மாள் உடலையும், மாணிக்காயி உடலையும் சேர்ந்து எடுத்து சென்று ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story